திருவண்ணாமலை:திருவண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவர் கடந்த பல ஆண்டுகளாக அர்ச்சனா ஏஜென்சி என்ற பெயரில் சாக்லேட், ஊதுபத்தி, குழந்தைகள் பால்பாட்டில், ஜெல்லி மிட்டாய் உள்ளிட்ட பொருட்களை திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் மொத்த விற்பனை செய்து வருகிறார்.
குறிப்பாக சாக்லேட் ஜெல்லி மிட்டாய் பொருட்களை புதுச்சேரியில் உள்ள மொத்த வியாபாரியிடம் இருந்து பெற்று திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சாக்லேட் மற்றும் ஜெல்லி மிட்டாய் அடங்கிய பொருள்களை மணிமாறன் வாங்கியுள்ளார்.
இது அனைத்தும் காலாவதியான பொருட்களாக இருப்பதால் வாங்கிய அனைத்து பொருட்களையும் கடைகளில் விற்பனை செய்யாமல் மீண்டும் மொத்த வியாபாரிக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இதுகுறித்து மொத்த வியாபாரிடம் காலாவதியான பொருட்கள் அனுப்பியுள்ளதாக விவரம் கேட்டுள்ளார்.