தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 26, 2020, 11:56 AM IST

ETV Bharat / state

நமக்குள் சண்டை வரக்கூடாது: சாகித்திய அகாதமி எழுத்தாளர் ஜெயஸ்ரீ சிறப்புப் பேட்டி

திருவண்ணாமலை: நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நூலை மொழிபெயர்த்ததற்காக சாகித்திய அகாதமி விருது வென்றிருக்கும் எழுத்தாளர் ஜெயஸ்ரீ ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ

மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலை கே.வி.ஜெயஸ்ரீ தமிழில் மொழிபெயர்த்தார். 2016ஆம் ஆண்டு வெளியான இந்த நாவலுக்காக சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்பாளர் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்திய அகாதமி விருது பெறும் முதல் திருவண்ணாமலை மாவட்ட எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜெயஸ்ரீயிடம் சாகித்திய அகாதமி விருதுக்கு வாழ்த்து தெரிவித்து விருது வென்றது குறித்து அவரது கருத்தை ஈடிவி பாரத் சார்பாக கேட்டோம். அப்போது அவர் நம்மிடம் பேசுகையில், “சங்க காலத்து பாணர்கள், விறலியர், கூத்தர் ஆகியோரின் வாழ்க்கை பயணம் குறித்து கூறக்கூடிய நூலாக இது உள்ளது.

எழுத்தாளர் ஜெயஸ்ரீ சிறப்புப் பேட்டி

சங்கத்தமிழ் என்பது தமிழர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று நாம் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், அது ஆதி தமிழர்களாகிய மலையாளிகளுக்கும் சொந்தம். நமக்குள் சண்டை போட்டுக்கொண்டிருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில்தான் மனோஜ் குரூர் எழுதியிருக்கிறார். இந்த நாவலை தமிழ் வாசகர்கள் பெரிதும் ஏற்றுக்கொண்டனர். இந்த நாவலுக்காக விருது பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details