தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்!

திருவண்ணாமலை: ஆடையூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் சேவையை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.

அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்
அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்

By

Published : Feb 13, 2021, 8:56 AM IST

திருவண்ணாமலை மாவட்ட ஒன்றியம் ஆடையூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அஜிதா வரவேற்றார். பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கிவைத்தார். தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தைகள் நல பரிசு பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த அம்மா மினி கிளினிக் மூலம் ஆடையூர், தேவனந்தல், வேடியப்பனூர் உள்பட 8 கிராம மக்கள் பயன்பெற உள்ளனர்.

இந்த கிளினிக் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்படும்.

இதையும் படிங்க: அம்மா மினி கிளினிக் பணியாளர்கள் நிரந்தரம் கிடையாது - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

ABOUT THE AUTHOR

...view details