திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், காமக்கூர் அருள்மிகு சந்திரசேகரர் சுவாமி திருக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத் துறை மூலமாக அமைக்கப்பட்டுள்ள புதிய தேரானது, காமக்கூர் மாடவீதிகளில் 36 ஆண்டுகளுக்குப் பின்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முயற்சியால் வெள்ளோட்டம் விடப்பட்டது.
கடந்த 1983ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் முடிந்த பின்னர், 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்த தேர் பழுதடைந்து பயன்படுத்த முடியாமல் போனது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இக்கோயிலுக்கு புதிய தேர் செய்வது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்துச் சென்றார்.
ரூ.33 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய தேர் குறித்த ஆலோசனை அதனடிப்படையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறை மூலமாக திருத்தேர் திருப்பணி நிதியிலிருந்து ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் செய்யும் பணிகள் தொடங்கி முழுமையாக முடிக்கப்பட்டு காமக்கூர் மாடவீதிகளில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
தேர் நிறுத்துவதற்கான கொட்டகை ரூபாய் 14 லட்சத்தில் விரைவில் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. அருள்மிகு சந்திரசேகரர் சுவாமி திருக்கோயில் புனரமைக்கும் பணிகளும் விரைவில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தேர் இலுப்பை மரத்தில் செய்யப்பட்டுள்ளது. தேரின் உயரம் 33 அடியாகும். தேரினை 200 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளோட்டம் விடுவதற்கான பாதையை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மற்றும் அலுவலர்கள் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் புதிய தேர் ஆரணி நகர மாடவீதிகளில் வெள்ளோட்டம் விடுவதற்கான பாதையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஆகியோர் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன், அரசு அலுவலர்கள், திருக்கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : சிக்கல் சிங்காரவேலவர் கோயில் தேரோட்டம்! - பக்கதர்கள் பக்தி பரவசம்