பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் மங்கலம் பெட்ரோல் பங்கிலிருந்து வங்கியில் செலுத்துவதற்காக பணம் எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து நிலை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அதேபோல், திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஞானவேல் என்பவரிடம் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1.20 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து வட்டாச்சியர் ஒப்படைத்தனர். மணிமேகலை தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று (மார்ச் 16) ஒரே நாளில் ரூ.3.30 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் ரூ.3.30 லட்சம் பறிமுதல்! - Rs 3.30 lakh seized in Thiruvannamalai
திருவண்ணாமலை: உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ.3.30 லட்சம் பணத்தை நிலைக் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
![திருவண்ணாமலையில் ரூ.3.30 லட்சம் பறிமுதல்! திருவண்ணாமலையில் ரூ.3.30 லட்சம் பறிமுதல் நிலை கண்காணிப்பு குழு உரிய ஆவணங்களின்றி ரூ.3.30 லட்சம் பறிமுதல் Rs 3.30 lakh seized in Thiruvannamalai Rs 3.30 lakh seized](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11039240-thumbnail-3x2-tvm.jpg)
Rs 3.30 lakh seized in Thiruvannamalai
திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் நிலைக் கண்காணிப்புக்குழு அலுவலர் மணிமேகலை தலைமையிலான காவலர்கள் நேற்றிரவு (மார்ச் 16) வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, மங்கலம் கிராமத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி இரு சக்கரவாகனத்தில் வந்த பிரபு என்பவரை மடக்கி சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 10ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது.