திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் பித்தளை தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த 19 ஆம் தேதி நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள், கம்பெனியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை உடைத்துவிட்டு 20 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை தகடுகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
தனியார் கம்பெனியில் பித்தளை தகடுகளைத் திருடிய மூன்று பேர் கைது!
திருவண்ணாமலை: பித்தளை தயாரிக்கும் கம்பெனியின் கதவை உடைத்து, பித்தளை தகடுகளைத் திருடிய 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பித்தளை பொருள்கள் திருட்டு போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ், இச்சம்பவம் தொடர்பாக வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகள் பயன்படுத்திய வாகனத்தின் நம்பரை வைத்து விசாரணை செய்ததில், சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது வாகனம் என்பது தெரியவந்தது.
விசாரணையில் அவருடைய சரக்கு வாகனம், கடந்த 17ஆம் தேதி திருப்டு போனது தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், முனியா, ரமேஷ் ஆகிய மூன்று பேரும் சரக்கு வாகனத்தைத் திருடிக் கொண்டு வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தில் உள்ள பித்தளை கம்பெனியில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பித்தளை தகடுகளைத் திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மூவரையும் கைது செய்ததோடு, திருடிய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.