தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சாலை பாதுகாப்பே உயிர் பாதுகாப்பு’ - விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த ஆட்சியர்!

திருவண்ணாமலை: சாலை பாதுகாப்பே உயிர் பாதுகாப்பு என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது.

road safety
road safety

By

Published : Jan 20, 2020, 3:15 PM IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் 31ஆவது சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கலந்துகொண்டு கொடி அசைத்து, இயற்கை விழிப்புணர்வு பேரணியை வழி நடத்தினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் அணி வகுத்தவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கின்ற அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அனைவரும் ஹெல்மெட் அணிந்து சென்றனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவு வாயிலில் தொடங்கி அண்ணா நுழைவு வாயில் வரை சென்றது. சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் பேரணியில் திருவண்ணாமலை அனைத்து ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பயிற்சி வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.

விழிப்புணர்வு பேரணி

மேலும், சாலை விதிகளை மதித்து, இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிந்து குடிபோதையில் வாகனம் ஓட்டாமல் இருக்க வேண்டும். கார், பேருந்து, லாரி ஆகிய வாகனங்கள் ஓட்டும்போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும், ஆட்டோவில் அதிக ஆட்களை ஏற்றக்கூடாது, இலகு ரக வாகனங்கள், பெரிய கனரக வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதையும் படிங்க: 'பண மதிப்பிழப்பால் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டுள்ளது' - நிர்மலா சீதாராமன்

ABOUT THE AUTHOR

...view details