திருவண்ணாமலை:ஆரணி அடுத்த இரும்பேடு ஹரிஹரன் நகரில் ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்போன் டவர் ஒன்று செயல்பட்டு வருவதாகவும், மீண்டும் நேற்று (அக்.26) அங்கு மற்றொரு நிறுவனத்தினர் செல்போன் டவர் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக தனியாருக்கு சொந்தமான இடம் சீர் செய்யப்பட்டு செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகள் தொடங்கினர்.
செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல் இதற்கு எதிரப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் ஆரணி-செய்யாறு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவரிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து,போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க:பஞ்சமி நிலத்தை பாதுகாக்க வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய கிராம மக்கள்