தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செய்யாறு அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் சாலை மறியல்! - election news

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளராக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டவரை மாற்றக்கோரி அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை
செய்யாறு அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் சாலை மறியல்

By

Published : Mar 14, 2021, 11:58 AM IST

திருவண்ணாமலை: வருகிற சட்டப்பேரவைத் தேர்தலுக்காக செய்யாறு தொகுதியில் அதிமுக சார்பில் தூசி.கே. மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது சட்டப்பேரவை எம்.எல்.ஏவாக உள்ள நிலையில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

செய்யாறு அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் சாலை மறியல்

அதனால் இதனை எதிர்த்தும், வேட்பாளரை மாற்றக் கோரியும் வெம்பாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர், “செய்யாறை காப்பாற்று” என கோஷங்கள் எழுப்பியவாறு, ஊர்வலமாக சென்று மாங்கால் கூட்டுரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செய்யாறு டிஎஸ்பி, மறியலில் ஈடுபட்டவர்களிடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்தார். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: குன்னூரில் திமுக, அமமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தினால் பொதுமக்கள் அவதி!

ABOUT THE AUTHOR

...view details