திருவண்ணாமலை: செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளியில் குடிப்பதற்கு சுத்தமான குடிநீரை பயன்படுத்தாமல் பாசிபடர்ந்த புழுபூச்சிகள் மிதக்கும் நீரை பயன்படுத்துவதால் நோய்தொற்று அபாயம் உள்ளது.
இதனை சிறிதும் கண்டுகொள்ளாமலும் ஆசிரியர்களின் தேவைகளுக்கு மட்டும் சுத்தகரிக்கபட்ட குடிநீரை வெளியில் இருந்து வாங்கி அருந்தி வருகின்றனர். மேலும் இதே நீரில் தான் மாணவர்களுக்கு உணவை சமைத்து வழங்கி வருகின்றனர்.
பலமுறை பெற்றோர்கள் இதனை பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் மாணவர்கள் மீது அக்கறை கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.