தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சத்தான உணவு வழங்கும் வருவாய்த் துறையினர்! - தனிமைப் படுத்தப் பட்டவர்கள்

திருவண்ணாமலை: வெளியூரிலிருந்து சொந்த ஊர் திரும்பி கரோனா பரிசோதனைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வருவாய்த் துறையினர் சத்தான உணவு வழங்க்வருகின்றனர்.

வருவாய்த்துறையினர்
வருவாய்த்துறையினர்

By

Published : Jul 4, 2020, 1:18 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அவ்வாறு வருபவர்களை மாவட்ட நிர்வாகம் கரோனா பரிசோதனைக்காகத் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்கவைக்கிறது. அங்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று இல்லை என்று உறுதியான பின் அவரவர் சொந்த வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

உணவு தயாரிக்கும் வருவாய்த்துறை
இவர்களுக்கு உணவு சுகாதாரமாகவும், சத்தானதாகவும் வழங்க வேண்டும் என்பதற்காக வருவாய்த் துறையினர் தாங்களாகவே உணவு சமைத்துப் பரிமாறிவருகின்றனர். சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு காலையில் இட்லி, பொங்கல், சுண்டல், மதிய வேளையில் தயிர்சாதம், வெஜிடபிள் பிரியாணி, முட்டை, இரவு நேரங்களில் தோசை, சப்பாத்தி ஆகியவை வழங்கப்படுகின்றன.
மதிய உணவு

தனிமைப்படுத்தும் மையங்களில் சுகாதாரம், பராமரிப்பு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது வருவாய்த் துறை அலுவலர்கள் உணவு வழங்கிவருவது வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details