தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கத்தில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

திருவண்ணாமலை: பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை செங்கம் அருகே முட்புதரில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

செங்கத்தில் பச்சிளம் குழந்தை மீட்பு
செங்கத்தில் பச்சிளம் குழந்தை மீட்பு

By

Published : Jan 18, 2021, 7:19 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரமனி என்பவர் இன்று காலை வீட்டிலிருந்து விவசாய நிலத்திற்கு செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு அருகே உள்ள முட்புதரில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

குழந்தையின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் முட்புதர் பகுதியில் சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் வெங்கடேசன், ஆம்புலன்ஸ் டிரைவர் சிவக்குமார், ஊழியர்கள் ஆகியோர் குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, உடனடியாக குழந்தையை செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குழந்தையை முட்புதரில் வீசிச்சென்றது யார் என்பது குறித்து செங்கம் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:6 வயது குழந்தைக்கு வெற்றிகரமாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை - மருத்துவர்கள் சாதனை

ABOUT THE AUTHOR

...view details