தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் சுற்றித் திரிந்த இளைஞர் மீட்பு! - Rescue Mental Retarded Youth

திருவண்ணாமலை: வேட்டவலம் புறவழிச்சாலையில் சுற்றி திரிந்த அடையாளம் தெரியாத நபரை மருத்துவமனையில் அனுமதித்து, பாதுகாப்பாக தங்க வைக்க மீட்புப் பணியாளர்கள் தேவையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சமூகநலத்துறை மீட்பு குழுவினர்
சமூகநலத்துறை மீட்பு குழுவினர்

By

Published : Apr 1, 2020, 1:53 PM IST


திருவண்ணாமலை வேட்டவலம் சாலை அருகிலுள்ள புறவழிச்சாலை இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் அடையாளம் தெரியாத நபர் சுற்றித்திரிந்து வந்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதையொட்டி கீழ்பென்னாத்தூர் பகுதி சமூக நலத்துறை மூலம் கரோனா வைரஸ் மீட்புப் குழு பணியில் ஈடுபட்டுவரும் எலிசபெத் ராணி இவரை பார்த்து விசாரணை செய்துள்ளார்.

சமூகநலத்துறை மீட்பு குழுவினர்

அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து அந்த நபரை அழைத்துச் சென்றார்.

தற்போது அவர்கள், அவரை மருத்துவமனையில் அனுமதித்து, பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லி சென்று வந்தவர்களால் கரோனா அதிகம் பரவ வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details