தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்ணமங்கலத்தில் கோயிலுக்குள் இயங்கும் பள்ளி - புதிய கட்டடத்தை விரைந்து கட்ட கோரிக்கை

திருவண்ணாமலை அருகே கண்ணமங்கலத்தில் கோயில் ஒன்றில் பள்ளிக்கூடம் இயங்கி வரும் நிலையில், விரைந்து புதிய பள்ளிக்கூடம் கட்டித் தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 20, 2022, 10:20 PM IST

கண்ணமங்கலத்தில் கோயிலுக்குள் இயங்கும் பள்ளி - புதிய கட்டடத்தை விரைந்து கட்ட கோரிக்கை

திருவண்ணாமலை: கண்ணமங்கலம் பேரூராட்சியில் பெருமாள் கோயிலில் இயங்கி வரும் அரசு ஒன்றிய துவக்க பள்ளிக்கு உடனடியாக பள்ளிக் கட்டடம் கட்டித் தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரணி அருகே கண்ணமங்கலம் பேரூராட்சியில் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்தப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் சுமார் 148 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், தலைமையாசிரியை சாந்தி உட்பட 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை காரணமாக பழுடைந்த ஒன்றிய துவக்க பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால், பள்ளி கட்டடம் கட்டித் தரக் கோரி பள்ளி சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து, இது சம்பந்தமாக கடந்த நவ.1ஆம் தேதி நடந்த பேரூராட்சி கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியை சாந்தி கதறி அழுது பள்ளி கட்டடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இச்சம்பவம், தொலைக்காட்சியிலும் நாளிதழிலும் சமூக வளைதளங்களிலும் வைரலாகியது.

மேலும், ஆரணி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரனும் நேரில் ஆய்வு செய்து எம்.எல்.ஏ நிதியிலிருந்து நிதி ஒதுக்கி பள்ளி கட்டடம் கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இதனையடுத்து, பாழடைந்த இந்தப் பள்ளி கட்டடத்தை மாவட்ட நிர்வாகம் இடித்து தரைமட்டாகியது.

ஆனால், தற்போது 50 நாட்களுக்கும் மேலாகிய நிலையில், இதுவரையில் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குள் வைத்து பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட கல்வி அலுவலர், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையினர் உள்ளிட்டோர் பள்ளிக் கட்டடத்தை விரைந்து கட்டித் தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள், மாணவர்களின் பெற்றோர் எனப் பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: குரூப் 1 தேர்விற்கு தயாராகிறீர்களா..? உங்களுக்கான ஹேப்பி நியூஸ்..!

ABOUT THE AUTHOR

...view details