திருவண்ணாமலை:சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திருவண்ணாமலையில் உள்ள 8 தொகுதிகளில் 186 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில், 41 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 145 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில், 23 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை இன்று திரும்ப பெற்றுக்கொண்டனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! - திருவண்ணாமலை மாவட்ட தொகுதிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
final
அதன்படி, திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 15 பேர், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 15 பேர், கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 21 பேர், கலசபாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 15 பேர், போளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 15 பேர், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 15 பேர், வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 11 பேர் என மொத்தம் 122 பேர் தற்போது களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:சந்தேகமிருந்தால் எனக்கு ஓட்டு போடாதீர்கள்!