திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அடுத்த மேலரணி கீழ்தாங்கள் சாலையின் அருகே உள்ள மலையோரத்தில், நேற்று (மார்ச்.15) இரவு இளைஞர் ஒருவர், தலையில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை, அப்பகுதி வழியாகச் சென்ற மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்து, கலசப்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இளைஞரின் உடலைக் கைப்பற்றி விசாரணை செய்துவந்தனர். அவ்விசாரணையின்போது, உயிரிழந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, காவல் துறையினர், இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மர்மமான முறையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த பிரகாஷின் உறவினர்கள் “உடலில் காயங்கள் இருப்பதால் அவரை அடித்து கொலை செய்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்தும் இதுவரையில் காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.