கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பையடுத்து நகைக் கடன் மட்டுமின்றி பொது கடன்களை ஆய்வு செய்யவும் குழு அமைத்து கூட்டுறவு துறை பதிவாளர் உத்தரவிட்டு இருந்தார். இதில் முறைகேடு துணை போன அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆரணி கூட்டுறவு வங்கியில் ரூ.2.39 கோடிக்கு போலி நகைகள் வைத்து கடன் வழங்கியது கண்டுப்பிடிக்கப்பட்டது. 77 நபர்கள் முறைக்கேடான முறையில் நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.