திருவண்ணாமலையில் தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலர்கள் சங்க முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தாமோதரன் வரவேற்றார்.
தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலர்கள் சங்க முப்பெரும் விழா - TIRUVANAAMALAI
திருவண்ணாமலை: தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலர்கள் சங்க முப்பெரும் விழா, திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது.
விழாவில், தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு (மாணவர்களுக்கு) பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டன. அதோடு ஓய்வுபெற்ற திருவண்ணாமலை மாவட்ட பதிவு உதவியாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
விழாவில் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சண்முகராஜன், பதிவுத்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் வாசுதேவன், தமிழ்நாடு வருவாய் துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, சார் பதிவாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.