திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கேளுர் ஊராட்சித் தலைவர் அதிமுகவைச் சேர்ந்த சங்கீதா. இவரது கணவர் அன்பழகன் இவர் கேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஆத்துவாம்பாடி கட்டிபூண்டி ஆகிய கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்துவருகின்றார்.
கேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் என்பவர் இருந்து வருகின்றார்.
தற்காலிக பதவி நீக்கம்
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கட்டிபூண்டி, ஆத்துவாம்பாடி ஆகிய கிராமத்தில் நியாய விலைக் கடையை சரிவர திறக்கப்படாமல் பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை விநியோகம் செய்யாமல் இருந்து வருவதாக கிராம பொதுமக்கள் கேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் புகாரளித்துள்ளனர்.
புகாரின்பேரில் துறை ரீதியான நடவடிக்கையாக அதிமுகவைச் சேர்ந்த கேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பொன்னம்பலம் நியாய விலைக் கடை விற்பனையாளர் அன்பழகனை தற்காலிக பதவி நீக்கம்செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், ஆத்துவாம்பாடி கட்டிபூண்டி கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் மாற்று ஊழியரை பணியமர்த்தி பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.