தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைக்கான ஆயிரம் ரூபாய், ரேஷன் பொருள்கள் விநியோகம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 42 ஆயிரத்து 602 குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் பணிகள் தொடங்கியது.
இதனையடுத்து கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கப்பலூர், வில்வாரணி, மோட்டூர், உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண விதி, ரேஷன் பொருள்களை தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் சமூக விலகலை மேற்கொள்ளும் வகையில் கலசப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு வழங்கினார்.