திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலை கோயில் அருகேயுள்ள கோபுரம் 1-வது தெருவில் நியாய விலைக் கடை இயங்கி வருகிறது. இந்த நியாய விலைக் கடையில் நேற்று விற்பனைத் தொடங்கியது.
இதையடுத்து, அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு ஆண்களும், பெண்களும் குவிந்தனர். அப்போது, பொருள்கள் வாங்க வந்தவர்கள் முகக் கவசம் ஏதும் அணியாமலும் தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்காமல் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இதைத் தொடர்ந்து, ஒருவரையொருவர் முட்டிமோதி பொருள்களை வாங்குவதில் மும்முரம் காட்டினர்.