திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்தில், ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அலுவலகத்தின் புதிய கட்டிடத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர், அலுவலக வளாகத்தில் கல்வெட்டை திறந்து வைத்து, மரக்கன்றுகள் நட்டார்.
நெடுஞ்சாலைத்துறையின் புதிய கட்டடம் திறப்பு! - அமைச்சர் புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார்
திருவண்ணாமலை: நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அலுவலக புதிய கட்டிடத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம், ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் மைதிலி, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், படவேட்டில் ரூ. 62 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள அன்னதான கூடத்திற்கு அமைச்சர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: மலேசியாவில் தவித்த முதியவர் தாய்நாடு திரும்பினார்!