திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி பகுதியில் உள்ள பாரதி நகரில் ரஜினி ரசிகர் மன்றம், ஆதிதிராவிடர் சமுதாய சமூக ஆர்வலர் இணைந்து 750 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை 144 தடை உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் குடும்பத்தினருக்கு வழங்கினர்.
நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் வேட்டவலம் நகர காவல்நிலைய ஆய்வாளர் ராணி கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நிவாரணப் பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசங்கள் அணிந்து நிவாரணப் பொருட்களை பெற்றுச் செல்லுமாறு அவர் அறிவுரை வழங்கினார்.