திருவண்ணாமலை:சமூக சேவகரின் மணிமாறன் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் தாயார் கண்மணி ஆகியோர் இணைந்து 2 ஆதரவற்றவர்களின் உடல்களை முறைப்படி காவல்துறை அனுமதி பெற்று இன்று (நவ.8) நல்லடக்கம் செய்தனர். இதுவரையில், 2,108 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார். ரஜினியிடம் ஆம்புலன்ஸ் வாகனம் பெற்ற மணிமாறன்,
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கடந்த ஒரு மாதங்களாக 65 வயது மதிக்கத்தக்க 2 ஆண்கள் உடல்கள் ஆதரவற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதனை உறவினர்கள் என யாரும் உரிமை கோராத நிலையில், இருந்த ஆதரவற்ற உடல்களை முறைப்படி காவல்துறையினர் அனுமதி பெற்று சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன் தனது சொந்த செலவில் மலர் மாலைகள், மலர்கள் மற்றும் இறுதிச் சடங்கிற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி அவரே 2 உடல்களையும் குழியில் வைத்து நல்லடக்கம் செய்தார்.
கரோனா காலத்திலும் நோய்த் தொற்றைப் பொருட்படுத்தாமல், அதவற்றோர்களின் உடல்களை அடக்கம் செய்த மணிமாறனின் சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இவரது சேவையைப் பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் இவருக்கு உடல்களைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஒன்றை அளித்துள்ளார். இதுவரையில் இவர், 2,108 ஆதவரற்ற இறந்தவர்கள் உடல்களை எந்த மதத்தைச் சார்ந்தவர்களோ? அந்த மத முறைப்படி நல்லடக்கம் செய்துள்ளார்.