தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் காதல்- காதலி வீட்டில் காதலன் தற்கொலை! - lover suicide in puthupalayam

திருவண்ணாமலை: புதுப்பாளையம் பகுதியில், ஆன்லைன் செயலி மூலம் காதலித்த வாலிபன், காதலியின் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் மூலம் காதல்-காதலி வீட்டில் காதலன் தற்கொலை
ஆன்லைன் மூலம் காதல்-காதலி வீட்டில் காதலன் தற்கொலை

By

Published : Feb 24, 2021, 9:30 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அம்ரின் (25), இவருக்கு அஜீஸ் என்பவருடன் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் yoyo சமூக வலைதளத்தின் மூலம், தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பூபதி (21) என்ற தனியார் பள்ளி வேன் ஓட்டுநராக இருந்து வரும், திருமணம் ஆகாத வாலிபருடன் அம்ரினுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

அம்ரின் பூபதியிடம் தன்னை கல்லூரி மாணவி என்றும், தனக்கு திருமணம் நடைபெறவில்லை எனவும் கூறி, கடந்த எட்டு மாதமாக yoyo செயலி மூலம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி, பூபதி, தனது வீட்டில் சேலத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்க்கு செல்வதாக கூறி, சமூக வலைதள காதலியான அம்ரின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அம்ரினுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது எனவும் அவருக்கு கணவர் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனிடையே, அம்ரினின் கணவர் வியாபாரத்திற்காக வெளியே சென்றுள்ளதாகவும், அவர் வருவதற்கு சில நாள்கள் ஆகும் எனவும் கூறி காதலன் பூபதியுடன் தனது வீட்டிலேயே இரண்டு நாள்கள் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அம்ரின் நேற்று மாலை, வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி வருவதாக கூறி, பூபதியை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது பூபதி, வீட்டில் உள்ள பேனில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வெளியே சென்ற அம்ரின், வீடு திரும்பியதும் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து அம்ரின் உடனடியாக புதுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், பூபதியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பூபதி எடுத்து வந்த மஞ்சள் தாலி மற்றும் செல்போனை பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பூபதியின் தந்தை தனது மகனின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி புதுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அம்ரினிடம் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:காதலித்த பெண்ணை நிச்சயம் செய்யும் வேளையில் தவறிய காவலரின் மனம்!

ABOUT THE AUTHOR

...view details