தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனிநபர் சாலை ஆக்கிரமிப்பு: ஜேசிபியை சிறைபிடித்த பொதுமக்கள்! - தனிநபர் ஆக்கிரமிப்பு

திருவண்ணாமலை: தனிநபர் சாலையை ஆக்கிரமிப்பு செய்ததால் பொதுமக்கள் ஜேசிபியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனிநபர் சாலை ஆக்கிரமிப்பு!
தனிநபர் சாலை ஆக்கிரமிப்பு!

By

Published : Oct 13, 2020, 8:46 PM IST

திருவண்ணாமலையை அடுத்த பனையூர் கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததால் சாலை குறுகலாக மாறியுள்ளது.

இதனால், ஒரு வாகனம் செல்லும்போது மற்றொரு வாகனம் எதிரே வர பாதையில்லாத நிலை உருவாகியுள்ளது.

தனிநபர் சாலை ஆக்கிரமிப்பு!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த சாலை ஆக்கிரமிப்பினால் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்நிலையில், அந்நபர் மீண்டும் ஜேசிபி இயந்திரம் கொண்டு இன்று சாலையை ஆக்கிரமித்தார்.

இதைக் கண்ட அப்பகுதியினர் ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

இந்தத் தகவல் அறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை வட்டாட்சியர் வெங்கடேசன், காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

வட்டாட்சியர் சமரசம்

இந்தச் சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

இதையும் படிங்க:'தம்பிதுரை மூலமாக மேம்பாலங்களே கட்டப்படவில்லை' - எம்.பி. ஜோதிமணி

ABOUT THE AUTHOR

...view details