திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே தெற்குமாவட்ட பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியையும், பாரதிய ஜனதா கட்சியையும் அவதூறாக பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிரதமர் மோடியை அவதூறாக பேசிய ராகுலை கண்டித்து ஆர்ப்பாட்டம் - Rahul has slandered Modi
திருவண்ணாமலை: அறிவொளி பூங்கா அருகே பிரதமர் நரேந்திர மோடியையும், பாரதிய ஜனதா கட்சியையும் அவதூறாக பேசிய ராகுல் காந்தியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பாஜக தலைவர் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறும்போது, 'பிரதமர் மோடியை அவதூறாக பேசிய ராகுலை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. மாவட்ட பாஜக கட்சியினர் சார்பில் இன்று ராகுலை கண்டித்து நாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 'மு.க ஸ்டாலினும் தற்போது பாஜகவை அவதூறாக பேசிவருகிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். ஐஐடி மாணவி மரணத்தில் கூட அரசியல் செய்து பதவி சுகம் தேட நினைக்கும் ஸ்டாலினின் கனவு என்றைக்கும் பலிக்காது' என விமர்சித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்புவார்' - திண்டுக்கல் லியோனி