தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'8 வழிச்சாலை... நிலத்தை கையகப்படுத்தினால் கையை வெட்டுவோம்!' - பெண்கள் ஆவேசம்

திருவண்ணாமலை: எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

aarpaatam

By

Published : Jun 4, 2019, 1:42 PM IST


ஐந்து மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரின் ஒன்றுபட்ட போராட்டத்தாலும் வழக்குகளாலும் சென்னை உயர் நீதிமன்றம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுக்கும் அரசாணையை ரத்து செய்து பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கும் மத்திய அரசையும், மவுனம் சாதித்துவரும் தமிழ்நாடு அரசை கண்டித்தும், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மக்களவைத் தேர்தல் நடப்பதற்கு முன்பாக எட்டு வழிச்சாலை வராது என்று கூறிய மாநில அரசு தற்போது எட்டு வழிச்சாலைக்கு ஆதரவாக மேல்முறையீடு செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு அராஜகமான முறையில் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த யார் வந்தாலும் நாங்கள் கத்தியால் வெட்டவும் செய்வோம் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஆவேசத்துடன் கூறினர்.

விவசாயிகளின் வீடு, நிலம், ஆடு, மாடு, கோழி, என வாழ்வாதாரம் எல்லாவற்றையும் இழந்துவிட்டு எங்களுக்கு எந்த வேலையும் தேவையில்லை. எங்கள் நிலத்தை வைத்துக்கொண்டு நாங்களாக பார்த்து மற்றவர்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் கொடுக்கும் வேலை எங்களுக்கு தேவை இல்லை என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details