திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர், "வருகின்ற 7ஆம் தேதி அன்று அருணாசலேசுவரர் திருக்கோயிலில் பெளர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம்.
தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளைக் கொண்டு மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யார் ஆகிய நான்கு நகராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பரிசோதனை நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி, 10 பேரூராட்சிகளில் புதன் மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாள் மட்டும் இறைச்சிக் கடைகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக் கடைகளுக்கு தற்காலிக காய்கறிச் சந்தையில் தனி இடம் ஒதுக்கித் தரப்படும்" என்றார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று!