திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும்பாலானோர் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். இதில் சிலர் கரும்பு பயிரிட்டு, அதன் மூலம் நாட்டு சர்க்கரை மற்றும் நாட்டு வெல்லம் தயாரித்து வருகின்றனர். இதனால் ஓரளவு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
கானலாபாடி மற்றும் கோவூர் ஆகிய கிராமங்களில் ஒரு ஆண்டு பயிரான கரும்பு பயிரிட்டு, இதனை அறுவடை செய்து சொந்தமாக நாட்டு சர்க்கரை மற்றும் நாட்டு வெல்லம் தயாரித்து வருகின்றனர். இதில் ஒரு ஏக்கர் இடத்தில் 30 முதல் 40 டன் வரை அறுவடை செய்து, ஒரு நாளைக்கு 3 டன் வரை, அறுவடை செய்து, கரும்பு ஆலை மூலம் அரைத்து, கரும்புச் சாற்றை கொப்பரையில் கொதிக்க வைத்து, அதன் மூலம் நாட்டுச் சர்க்கரை மற்றும் நாட்டு வெல்லம் தயாரித்து வருகின்றனர்.