நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக, அரசானது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது. அதன்படி பள்ளிகளும் மூடப்பட்டதால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலையின்றி தவித்துவருகின்றனர். இதனால் இந்தக் கல்வி ஆண்டிலும் அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிதியுதவி: ஆட்சியரிடம் மனு
திருவண்ணாமலை: கரோனா காரணமாக, தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவித்துவருவதால் அரசு நிதி உதவி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். அவர்களில், திருவண்ணாமலை, செங்கம், ஆரணி, செய்யாறு, போளூர் ஆகிய 5 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ( ஏப்ரல் 28) மனு அளித்தனர் .
அதில், "ஆந்திராவில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 கிலோ அரிசியை அம்மாநிலத்தின் அரசானது வழங்குவது போல, தமிழ்நாட்டிலும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் 2000 ரூபாய் மற்றும் 25 கிலோ அரிசியை, தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.