திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவுவாயில் முன்பு ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்தல், தேசிய கல்விக் கொள்கை கைவிடுதல், ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளை மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கண்காணிக்கும் முடிவை திரும்ப பெறுதல், ஆசிரியர்கள் போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.