தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேமுதிக மீது யார் கைவைத்தாலும்...! எச்சரிக்கும் பிரேமலதா - துரைமுருகன்

திருவண்ணாமலை: தேமுதிக மீது யார் கைவைத்தாலும் துரைமுருகனுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் எச்சரித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்

By

Published : Apr 2, 2019, 7:58 AM IST

தேமுதிக பொருளாளர் பிரேமலதா திருவண்ணாமலை காந்தி சிலை அருகே அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து நேற்று பரப்புரையில் ஈடுபட்டார்.

பிரேமலதா விஜயகாந்த்

அப்போது அவர் பேசியதாவது, 'மத்தியில் வலுவான ஆட்சி மீண்டும் அமைய பாரதப் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடியே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேமுதிகவை உதாசீனப்படுத்திய திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று எந்த நிலையில் அசிங்கப்பட்டு இருக்கிறார் என்பதை நாடு அறியும்.

எனவே தேமுதிகவின் மீது யார் கைவைத்தாலும் யார் சீண்ட நினைத்தாலும் அவர்களுக்கும் துரைமுருகனுக்கு ஏற்பட்ட இதே நிலைதான் ஏற்படும். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று நாடும் நமதே நாளை நமதே என்பதை நிரூபிக்கக்கூடிய தேர்தலாக இது இருக்கும்.

எனவே அனைவரும் அதிமுகவின் வெற்றி வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்'என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details