திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இரு வேறு சம்பவங்களில் கர்ப்பிணி பெண், ட்ராவல்ஸ் ஓட்டுநர் பலி - மின்சாரம் தாக்கி பலி
திருவண்ணாமலை: செங்கம் பகுதியில் இரு வேறு சம்பவங்களில் கர்ப்பிணி பெண், ட்ராவல்ஸ் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சுஜாதா தனது விளைநிலத்தில் உள்ள கிணற்றிலிருந்து குடிதண்ணீருக்காக மின்மோட்டாரை இயக்கியபோது மின்கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் தாக்கி உள்ளது.
சுஜாதாவின் அலறல் சத்தம் கேட்ட அவரது தந்தை முனுசாமி ஓடிச்சென்று சுஜாதாவை காப்பாற்ற முயன்ற போது அவரையும் மின்சாரம் தாக்கி உள்ளது. இதனை கண்ட சுஜாதாவின் தாயார் பதட்டத்துடன் தனது மகள், மருமகன் மின்சாரத்தில் சிக்கிக் கொண்டதைக் கண்டு அவர்களை காப்பாற்ற முயன்ற போது அவரையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.
இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சுஜாதா பரிதாபமாக உயிரிழந்தார். அதிஷ்டவசமாக அவருடைய தாய், கணவர் காப்பாற்றப்பட்டனர்.
கர்ப்பிணி பெண் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று செங்கம் அடுத்த தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (25). ட்ராவல்ஸ் வாடகை ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தபோது அப்போது திடீரென மயங்கி விழுந்து உள்ளார், அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த போது வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செங்கம் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்த நிகழ்வால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.