திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பிரதோஷ வழிபாடு நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (ஏப். 9) அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.
மேலும் நந்தி பகவானுக்கு அரிசிமாவு, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், விபூதி, இளநீர், சந்தனம் போன்றவற்றால் அபிஷேக தீபாராதனைகளும் நடைபெற்றன.