பிரதோஷத்தையோட்டி அண்ணாமலையார் கோயில் பெரிய நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.
அண்ணாமலையார் கோயில் பெரிய நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு - Pradosa worship to Lord Nandi of Annamalaiyar Temple
திருவண்ணாமலை: பிரதோஷத்தையோட்டி அண்ணாமலையார் கோயில் உள்ள பெரிய நந்தி சிலைக்கு பால், தயிர், தேன், விபூதி, உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயில் பெரிய நந்தி
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அம்மாவாசையை முன்னிட்டு பிரதோஷ வழிபாடு இன்று (ஜன.10) நடைபெற்றது.