திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு அமாவாசை, பௌர்ணமி நாளை முன்னிட்டு மாதந்தோறும் இரண்டு முறை பிரதோஷ வழிபாடு நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை மறுநாள் (ஜூன் 9) அமாவாசையையொட்டி இன்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்குப் பிரதோஷ சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ வழிபாடு - திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள்
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ வழிபாடு
அதையொட்டி நந்திபகவானுக்கு, அரிசி மாவு, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், விபூதி, இளநீர், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்திபகவான் காட்சியளித்தார்.
கரோனா ஊரடங்கால் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.