தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிரிவலப்பாதை மகா நந்திக்கு நடந்த ஆடி மாத பிரதோஷ பூஜை!

திருவண்ணாமலை: ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, கிரிவலப்பாதையில் உள்ள மகா நந்திக்கு நடந்த சிறப்புப் பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மகா நந்திக்கு பூஜை
மகா நந்திக்கு பூஜை

By

Published : Jul 18, 2020, 9:28 PM IST

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், கிரிவலப்பாதையில் உள்ள மகா நந்திக்கு ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன், திருநீறு உள்ளிட்டப் பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு, சாதுக்களால் அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் மகா நந்திக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பூ மாலை செலுத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கிரிவலப்பாதையில் உள்ள மகா நந்திக்கு நடைபெற்ற பூஜையில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதோஷ வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். தற்போது கரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்ததைக் கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக, அருணாச்சலேஸ்வரர் கோயில் மூடிய நிலையில் இருந்தது. இதனால், பக்தர்களை அனுமதிக்காமல் சிவாச்சாரியார்கள் மட்டுமே பூஜை நடத்தி வருகின்றனர்.பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாததால், கிரிவலப்பாதையில் சாதுக்களால் மகா நந்திக்கு ஆடி மாத பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details