பிரதமரின் 70ஆவது பிறந்த நாள் வருகிற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், காந்திநகரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் பாஜக மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் எஸ்.தணிகைவேல் தலைமையில், 108 குத்துவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குத்துவிளக்கு பூஜை! - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை : பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட மாபெரும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
poojai For modi birthday in tiruvannamalai
இந்தப் பூஜையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கு எடுத்து வந்து, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, அனைத்து மக்களும் நலம்பெற வேண்டி பூஜை செய்தனர். இந்தப் பூஜையில் கலந்துகொண்ட 300க்கும் மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் முன்னதாக டோக்கன் வழங்கப்பட்டு, கோயில் பிரசாதம், சேலை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
இதில் மாவட்டத் தலைவர் ஆர்.ஜீவானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரமேஷ், சதீஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.