தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் திருநாள் கோலப்போட்டி - வீட்டுவாசலில் வண்ண கோலங்கள் போட்ட பெண்கள் - போளூர் வட்ட தமிழ்ச் சங்கம்

திருவண்ணாமலை: பொங்கல் திருநாளை முன்னிட்டு போளூர் அரிமா சங்கம், போளூர் வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் கோலப் போட்டி நடத்தப்பட்டது.

kolam
kolam

By

Published : Jan 16, 2020, 2:33 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரிமா சங்கம், போளூர் வட்ட தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து பொங்கல் தினத்தையொட்டி கோலப் போட்டிகளை நடத்தினர்.

இந்த கோலப் போட்டியில் பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பல்வேறு விதமான வண்ண கோலங்களை தங்கள் வீடுகளின் முன்பாக அழகாக இட்டு அசத்தினர். கோலங்களை போட்டிக்கான நடுவர்கள் சுரேஷ், அரிமா சங்கத் தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பார்வையிட்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அறிவித்தனர்.

வண்ண வண்ண கோலங்கள்

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.1500, இரண்டாம் பரிசு ரூ.1000, மூன்றாம் பரிசு ரூ.500 மதிப்புள்ள புடவைகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் கலந்துகொண்ட 10 இல்லத்தரசிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: மாட்டுப் பொங்கல் விழா: சூடுபிடிக்கும் கயிறு விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details