தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லஞ்சம் வாங்கிய போளூர் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கைது!

போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சம் பெற்றது தொடர்பாக பணி மேற்பார்வையாளர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சம் வாங்கிய போளூர் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கைது!
லஞ்சம் வாங்கிய போளூர் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கைது!

By

Published : Jul 19, 2022, 5:10 PM IST

திருவண்ணாமலை:போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் புருஷோத்தமன் என்பவர் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இதே அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக ராஜ்குமார் என்பவர் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக உள்ளார். இவர்கள் அத்திமூர் ஊராட்சியில் ஒப்பந்ததாரர் ராஜாராம் பதினைந்தாவது நிதி குழுவில் ரூபாய் 2 லட்சம் செலவில் பக்க கால்வாய் கட்டியதற்காக, கடந்த ஆறு மாதமாக உரிய பில் வழங்காமல் லஞ்சம் கேட்டு இழுத்தடித்துள்ளனர்.

எனவே, ராஜாராம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இவ்வாறு கிடைத்த புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மைதிலி மற்றும் பிரபு, கோபிநாத், முருகன், நந்தகுமார் கொண்ட குழுவினர் போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புருஷோத்தமன் 20,000 ரூபாயை லஞ்சமாக பெற்றபோது கையும் களவுமாக கைது செய்தனர்.

இச்சோதனை 7 மணிநேரம் நடைபெற்றதால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:மருத்துவர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் சலுகை - வாரி வழங்கிய டோலோ?

ABOUT THE AUTHOR

...view details