திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்ரவர்த்தி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர், மாவட்டக் கல்வி அலுவலர்கலுடன் இணைந்து போளுர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை மறுவாழ்வு குறித்தும் போளுர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பேரணி நடத்தப்பட்டது.