திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அடையாள அட்டை வழங்குவதற்காக இரண்டு நாட்களுக்கும் மேலாக வட்டார வளர்ச்சி அலுவலரை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தச் சூழலில் அவர்களை காவல் துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அனைத்து முகவர்களும் போராட்டத்தில் இறங்கினர்.
வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - திருவண்ணாமலையில் வாக்குப்பதிவு முகவர்கள் போராட்டம்
திருவண்ணாமலை: பெரியார் சிலை அருகே வட்டார வளர்ச்சி அலுவலரை காணவில்லை என ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மைய முகவர்கள், அனுமதிச்சீட்டு வழங்கவில்லை என்பதால் 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
![வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்! protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5562769-thumbnail-3x2-re.jpg)
protest
போராட்டத்தில் ஈடுபட்ட முகவர்கள்
இரண்டு நாட்களாக வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாத காரணத்தால், வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லக்கூடிய வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே கூடி கோஷமிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சமரச பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: நெல்லை கண்ணனை கண்டித்து பாஜகவினர் போராட்டம்: ஹெச்.ராஜா கைது