தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளம்பெண்ணிடம் தகராறு செய்த காவலர் பணியிடை நீக்கம்

வேட்டவலம் அருகே இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

காவலர் பணியிடை நீக்கம்
காவலர் பணியிடை நீக்கம்

By

Published : Jun 28, 2021, 7:24 AM IST

திருவண்ணாமலை: வேட்டவலம் அடுத்த இலுப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் திருவள்ளூர் ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணியாற்றிவருகிறார். இவரும், வேட்டவலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பிரசாந்துக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர், வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் பிரசாந்த் காதலித்ததாகக் கூறப்படும், இளம்பெண்ணுக்கு அவரது உறவினர்கள் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்த பிரசாந்த், இளம்பெண்ணின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இது குறித்து வீட்டிற்கு வந்த உறவினர்களிடம், இளம்பெண் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளம் பெண்ணின் உறவினர் ஒருவர், பிரசாந்தின் வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவம் குறித்து தட்டிக்கேட்டுள்ளார். அப்போது இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பிரசாந்த், அவரது தந்தை சின்னதுரை, மைத்துனர் ராஜா ஆகியோர் இளம்பெண்ணின் உறவினரைக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இளம்பெண்ணின் உறவினர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பிரசாந்த், சின்னதுரை, ராஜா ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட காவலர் பிரசாந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details