தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழு ஊரடங்கு: ட்ரோன் மூலம் காவல் துறையினர் கண்காணிப்பு! - tiruvannamalai latest news

திருவண்ணாமலை: ஊரடங்கு விதிகளை மீறுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

முழு ஊரடங்கு
முழு ஊரடங்கு

By

Published : May 26, 2021, 7:15 AM IST

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்தநிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் ட்ரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (மே.25) ட்ரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இளைஞர்கள் கையுந்து பந்தாட்டம்(வாலிபால்) விளையாடிக் கொண்டிருந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் நடைபயணம் மேற்கொண்டு வந்தனர்.

ட்ரோன் மூலம் காவல் துறையினர் கண்காணிப்பு

உடனே அங்குச் சென்ற காவல் துறையினர் பொது மக்களிடம் கரோனா தொற்றுப் பரவல் குறித்து எடுத்துக் கூறி, அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் யாரும் வரவேண்டாம் என அறிவுரை வழங்கினர்.

இதையும் படிங்க: 1913க்கு ஒரு ரீங் விட்டா போதும்' - கரோனா நோயாளிகளுக்காக சென்னை மாநகாரட்சியின் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details