திருவண்ணாமலை: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீர். இவர் தனது மனைவி அப்ரீனுடன், வந்தவாசி கோட்டைக்குள் முஸ்லிம் தெருவில் உள்ள மாமனார் இப்ராகிம் என்பவரது வீட்டுக்கு வந்தார். இவர் சுமார் 10 சவரன் தங்க நகைகளை கைப்பையில் வைத்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் தடம் எண் 148 அரசு பேருந்தில் வந்தபோது, மானாம்பதி கூட்டுச்சாலையில் கைக்குழந்தையுடன் ஏறிய 3 பெண்கள் இவர்கள் அருகில் அமர்ந்துள்ளனர்.
அரசு பேருந்தில் நகைகொள்ளையடிக்க முயற்சி - 2 பெண்கள் பிடிப்பட்டனர்
வந்தவாசி அருகே ஒடும் பேருந்தில் பயணியிடம்10 சவரன் நகை பேக்கை திருட முயன்ற 3 பெண்களில் 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.
இவர் சற்று அயர்ந்த நேரத்தில் கைப்பையில் உள்ள நகைகளை ஒரு பெண் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இன்னொருபுறம் அமர்ந்திருந்த வசீரின் மனைவி இறங்கும் இடம் வந்துவிட்டதால் பைகளை சரிபாருங்கள் என கூறவே, வசீர் பையை பார்த்தபோது, அருகிலிருந்த பெண் களவாடுவது தெரிந்து அவரை பிடிக்க முயற்சித்துள்ளார். இந்த சப்தம் கேட்டு பேருந்து நிற்கவே 1 பெண் தப்பிச் சென்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் 2 பெண்களை பிடித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல் உதவி-ஆய்வாளர் வரதராஜ் அந்த பெண்களை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது
இதையும் படிங்க:கிளப் ஹவுஸ், ஸ்வீட்மீட் செயலி மூலம் சிறுமிக்கு காதல் வலை வீசியவர் கைது!