கரோனா இந்தியாவை முடக்கியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டு காவல் துறையினர் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை நகரப்பகுதியின் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே தடுப்பு வேலிகளை அமைத்து அத்தியாவசியத் தேவைகள் தவிர பொதுமக்கள் யாரும் வீதிகளில் தேவையின்றி உலாவுவதை தவிர்க்க காவல் துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் 250-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், ஊர்காவல் படையினர் என பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலவேம்பு கசயாம் பருகும் காவலர்கள் இவர்களின் உடல்நிலைகளில் பாதிப்பு ஏற்படாதவகையிலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு மாவட்ட காவல் துறையின் சார்பில் நிலவேம்பு, கபுசூர சித்த மருந்துகள் கலந்து செய்யப்பட்ட கசாயம் வழங்கப்பட்டது.
இந்தக் கசாயத்தின் மூலம் பொது வெளியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும் என்று காவல் துறை உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மீன்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்