திருவண்ணாமலை மாவட்டம், மோரணம் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பனின் மகன் மணிகண்டன் (27). இவரை வழக்கு சம்பந்தமாக மோரணம் காவல் நிலைய காவலர் துரைராஜ் விசாரித்துள்ளார். அப்போது அவரை மணிகண்டன் தாக்கி, விசாரணை செய்யவிடாமல் தடுத்தது மட்டுமின்றி, 'காவல் நிலையத்தையும், உன்னையும் (துரைராஜ்) பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுவேன்' என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
காவலரைத் தாக்கிய நபர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது! - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை: காவலரைத் தாக்கிய நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.
மணிகண்டன்
இந்நிலையில் காவலரைத் தாக்கிய மணிகண்டனின் சட்டவிரோதச் செயலைக் கட்டுப்படுத்தும்விதமாக இன்று (செப். 22) அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 99 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.