திருவண்ணாமலை: தமிழ்நாடு முழுவதும் இன்று (ஏப்.6) சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்குள்பட்ட சோமாசிபாடி கிராமத்திலுள்ள டேனிஷ் மிஷன் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டுப்போட்டதாகக் கூறி பாமகவினர், அதிமுகவினர் காட்டுகுளம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிவிரைவு படை, காவல்துறையினர் அவர்களை விரட்டியடித்தனர். இதனைத் தொடர்ந்து டேனிஷ் மிஷின் உயர்நிலை பள்ளியில் உள்ள மூன்று வாக்குச்சாவடிகளில் கதவுகள் அடைக்கப்பட்டு வாக்காளர்களை சோதனைக்கு பின்னரே காவல்துறை வாக்களிக்க அனுமதித்தனர்.