திருவண்ணாமலை நகர மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள வணிக வளாகக் கட்டடத்தில் முபாரக் என்பவர் மொத்த விற்பனைக் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில் அப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடப்பதாக நகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் அலுவலர்கள் ஆய்வு செய்தபோது தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், டீ கப்புகள் உள்ளிட்ட 500 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.